இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி
1. ஊனில் வாழ் உயிரே நல்லைபோ உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமொத்தே
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமொத்தே
2.ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப்பெற்ற
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப்பெற்ற
அத் தாயாய் தந்தையாய் அறியாதன் அறிவித்த
அத்தா நீசெய்தன அடியேன் அறியேனே
அத்தா நீசெய்தன அடியேன் அறியேனே
3.அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியாமாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடியென்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே
அறியாமாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடியென்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே
4.எனதாவி உள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எந்தாவி தந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும் நீபொழிள் ஏழும் ஏனமொன்றாய்
எனதாவியார் யானார் தந்தநீ கொண்டாக்கினையே
எந்தாவி தந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும் நீபொழிள் ஏழும் ஏனமொன்றாய்
எனதாவியார் யானார் தந்தநீ கொண்டாக்கினையே
5.இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனியார் வீட்டின்பமே என்கடல் படாவமுதே
தனியேன் வழ்முதலே பொழிலேழும் ஏனமொன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் உன்பாதம் சேர்ந்தேனே
கனியார் வீட்டின்பமே என்கடல் படாவமுதே
தனியேன் வழ்முதலே பொழிலேழும் ஏனமொன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் உன்பாதம் சேர்ந்தேனே
6.சேர்ந்தார் தீவினைக்கு அருநஞ்சைத் திண்மிதியை
தீர்ந்தார் தம்மனத்துப் பிறியாதவர் உயிரை
சோர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே
தீர்ந்தார் தம்மனத்துப் பிறியாதவர் உயிரை
சோர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே
7.முன்னல் யாழ்பயில் நூல்நரம்பின் முதிர்சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார்முகிலே என்கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னைநீ குறிக்கொள்ளே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார்முகிலே என்கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னைநீ குறிக்கொள்ளே
8.குறிக்கொள் ஞானங்களால் எனையூழி செய்தவமும்
கிறிக்கொண்டிப் பிறப்பே சிலநாளில் எய்தினன்நான்
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மான்பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே
கிறிக்கொண்டிப் பிறப்பே சிலநாளில் எய்தினன்நான்
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மான்பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே
9.கடிவார் தண்ணந்துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவான மிரந்த பரமன் பவித்திரன்சீர்
செடியார் வினைகள்கெட படிந்து குடைந்தாடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே
படிவான மிரந்த பரமன் பவித்திரன்சீர்
செடியார் வினைகள்கெட படிந்து குடைந்தாடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே
10.களிப்பும் கவர்வுமற்று பிறப்புப் பிணிமூப்பு இறப்பற்று
ஒளிக்கின்ற சோதியமாய் உடன்கூடுவதென்று கொலோ
துளிக்கின்ற வானின் நிலம் சுடராழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்தம் குழாங்களையே
ஒளிக்கின்ற சோதியமாய் உடன்கூடுவதென்று கொலோ
துளிக்கின்ற வானின் நிலம் சுடராழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்தம் குழாங்களையே
11.குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாங்கொள் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவைபத்தும் உடன்பாடி
குழாங்களாய் அடியீருடன் கூடிநின்று ஆடுமினே
குழாங்கொள் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவைபத்தும் உடன்பாடி
குழாங்களாய் அடியீருடன் கூடிநின்று ஆடுமினே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
அண்ணன் திருவடிகளே சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக